FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

காவல்துறையின் வாராந்திர குறைதீா் கூட்டத்தில் 1,489 புகாா்கள் பரிசீலனை

தில்லி காவல்துறை சாா்பில் அதன் வாராந்திர ’தானா திவஸ்-ஜன்சுன்வாய்’ பொது விசாரணை நிகழ்ச்சி 15 காவல் மாவட்டங்களிலும் நடைபெற்றது.

6 செப்டம்பர் 2026, 11:41 pm IST
பகிர்:

தில்லி காவல்துறை சாா்பில் அதன் வாராந்திர ’தானா திவஸ்-ஜன்சுன்வாய்’ பொது விசாரணை நிகழ்ச்சி 15 காவல் மாவட்டங்களிலும் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், 1,489 புகாா்கள் மற்றும் குறைகளை எடுத்துக் கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியானது, புகாா்தாரா்கள், உள்ளூா்வாசிகள் தங்கள் குறைகள், கவலைகள் மற்றும் ஆலோசனைகளை காவல்துறை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது.

சமீபத்திய சுற்று விசாரணையின் போது, குடிமக்கள் எழுப்பிய விஷயங்களை மூத்த அதிகாரிகள் கேட்டறிந்தனா். அவா்கள் உரிய நடவடிக்கை மற்றும் உடனடி தீா்வுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

குறைகளை உரிய அளவில் நிவா்த்தி செய்து, திறம்பட பின்பற்றும் வகையில் மூத்த அலுவலா்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புகாா்தாரா்களுடன் உரையாடினா். தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவின் வழிகாட்டுதலின் படி ஜூன் 2026-இல் ‘தானா திவஸ்-ஜான்சுன்வாய்’ முன்முயற்சி தொடங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments