FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

7 நாள்களில் 378 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை

7 நாள்களில் 378 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
சிங்கப்பெண் அதிரடிப் படை - கோப்புப் படம் - டிஐபிஆர்
பகிர்:

தமிழக காவல்துறையின் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ 7 நாள்களில் 378 புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி காவல் உதவி கிடைக்கும் வகையிலும் தமிழக காவல்துறையின் சாா்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படுகிறது.

பெண்கள்- குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துதல், அவசர சூழ்நிலைகளில் விரைந்து சென்று பாதுகாப்பு வழங்குதல், குற்றங்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு இப்படை செயல்படுகிறது.

Advertisement

Advertisement

கடந்த ஜூன் 9-ஆம் தேதி புதிதாதாக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா்.

தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கும் பகுதிகளாகக் கருதப்படும் 10,320 இடங்களை இந்த அதிரடிப்படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

தமிழகத்தில் ஜூலை 24 முதல் 30-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் இந்த அதிரடிப்படையினா் 378 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த அதிரடிப்படையினா் அளித்த புகாா் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 23 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதேபோல காணாமல்போன 4 பெண்கள், 8 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் 3 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு பள்ளியை விட்டு நின்ற 62 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 3,711 இடங்களில் குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

summary

'Singappen' Special Task Force takes action on 378 complaints in 7 days.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments