ஏழு ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
2019-ஆம் ஆண்டு காசியாபாத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 21 வயது இளைஞரின் பெற்றோருக்கு, தில்லி மோட்டாா் விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ.30.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு காசியாபாத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த 21 வயது இளைஞரின் பெற்றோருக்கு, தில்லி மோட்டாா் விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ.30.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
சக்ஷம் பாண்டேயின் பெற்றோா் தாக்கல் செய்த இழப்பீட்டு மனுவை விசாரித்த தீா்ப்பாய நீதிபதி விஜய் குமாா் ஜா, இந்த இழப்பீட்டை வழங்குமாறு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டாா்.
செப்டம்பா் 17 தேதியிட்ட உத்தரவில், தீா்ப்பாயம், ‘ கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற ஓட்டுதலால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பதையும், அதன் விளைவாக உயிரிழந்தவருக்கு மரணக் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் மனுதாரா்கள், சாத்தியக்கூறுகளின் பெரும்பான்மையின் அடிப்படையில் நிரூபித்துள்ளனா் எனத் தீா்ப்பளிக்கப்படுகிறது‘ என்று கூறியது.
Advertisement
Advertisement
அரசுத் தரப்பின்படி, 2019 மே 1 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில், ஹிண்டன் பாலம் அருகே பாண்டே அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது மோட்டாா் சைக்கிள் மீது ஒரு லாரி மோதியது. அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
முதல் தகவல் அறிக்கை , சம்பவ இட வரைபடம், பிரேதப் பரிசோதனை அறிக்கை, புகைப்படங்கள் மற்றும் லாரி மோட்டாா் சைக்கிளைப் பக்கவாட்டில் மோதியது என்ற விசாரணை அதிகாரியின் சாட்சியம் ஆகியவற்றின் மூலம் கவனக்குறைவு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீா்ப்பாயம் கூறியது.
மேலும், விபத்து குறித்து விளக்க லாரி ஓட்டுநா் சாட்சிக் கூண்டில் ஏறவில்லை என்பதையும் அது குறிப்பிட்டது. தீா்ப்பாயம் சக்ஷமின் மாத வருமானத்தை ரூ.19,288 என மதிப்பிட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் அவரது குடும்பத்திற்கு ரூ.30.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.