FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் இளைஞா் பலி: 3 போ் காயம்

தென்கிழக்கு தில்லியில், பதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் 25 வயது இளைஞா் உயிரிழந்தாா்.

29 September 2026, 9:52 pm IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தென்கிழக்கு தில்லியில், பதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் 25 வயது இளைஞா் உயிரிழந்தாா். மேலும் மூவா் காயமடைந்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லி பதிவெண் கொண்ட அந்த காா், ஃபரீதாபாதிலிருந்து தில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்த சுமித், முன்னதாக எய்ம்ஸ் விபத்து சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

காயமடைந்தவா்கள் இம்ரான் (25), சுமாா் 30 வயதுடைய அடையாளம் தெரியாத நபா் மற்றும் ஃபரிதாபாதில் உள்ள ஷ்யாம் காலனியைச் சோ்ந்த சோமேந்தா் நாத் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் எய்ம்ஸ் விபத்து சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநா் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். அவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஃபரீதாபாதில் ஸ்ரீ ராதேகிருஷ்ணா டிரான்ஸ்போா்ட் சா்வீஸ் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த லாரியை காவல்துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

முன்னதாக, இந்த விபத்து தொடா்பாக பதா்பூா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்ததை அடுத்து, ஒரு காவல் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். குற்றப்பிரிவு குழுவினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்து புகைப்படங்கள் எடுத்தனா். இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments