அயோத்திக்கும் காசிக்கும்
தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர் பழைமைவாய்ந்த கோயில்களுக்குச் சென்று அதைப் பற்றிய முழுத் தகவல்களை நூலாக்குகிறார்.
அயோத்திக்கும் காசிக்கும் -ஓர் இனிய பயணம்-ரா. பரிமளா; பக். 112; ரூ. 120; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017; ✆ 91764 51934.
தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர் பழைமைவாய்ந்த கோயில்களுக்குச் சென்று அதைப் பற்றிய முழுத் தகவல்களை நூலாக்குகிறார்.
வாரணாசி குறித்து பல நூல்கள் வந்திருந்தாலும், அதன் தொன்மை, அங்குள்ள கோயில்கள், 10,000 ஆண்டுகளுக்கு மேலான பழைமை, மக்களின் நம்பிக்கைகள், அங்கு உயிர்துறக்க விரும்புவதற்காகவே காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர்... என்று பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நாட்டின் நிர்வாகத் தலைநகராக தில்லியும், நிதி- பொருளாதாரத் தலைநகராக மும்பையும் இருந்தாலும், கல்வி- ஆன்மிகத்துக்கான தலைநகராக வாரணாசி இருப்பதாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான ஆதாரங்களைப் பட்டியலிடுகிறார். அறிவு, தத்துவம், கலாசாரம், இறைபக்தி, இந்தியக் கலைகள், கைவினைப் பொருள்கள், ஆயுர்வேத மருத்துவம் போன்றவையும் வாரணாசியில் மையம் கொண்டுள்ளது என்பது படிக்கும்போது அறிய முடிகிறது.
உலகிலேயே தோன்றிய முதல் நகரமான இங்கு இறந்துவிடுவதற்காகவே ஒரு கூட்டமே காத்திருக்கிறது, அங்கு இறந்தால் உறவினர்கள் யாரும் அழுவதில்லை, ஆன்மிகச் சொற்பொழிவுகள் எப்போதும் நிகழ்த்தப்படும் காசி லாப் முக்தி பவன், 9 ஆயிரம் ஆண்டுகளாக எரியும் அணையா தீபம் என்றெல்லாம் வியப்பூட்டும் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
காசியில் உள்ள பிரபலமான 20-க்கும் மேற்பட்ட கோயில்கள், கல்வி நிறுவனங்களின் வரலாறு போன்றவையும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் பிரச்னையை துல்லியமாக அலசி, கோயில் உருவான வரலாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.