FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கல்வெட்டுகளில் திருப்பெயர்கள்!

அளப்பரிய ஆன்மிகப் பெருமைகளைக் கொண்ட மதுரையம்பதியில் உறையும் இறைவனுக்கும், இறைவிக்கும் ஏராளமான திருப்பெயா்கள் குறிப்பிடப்படுகின்றன.

17 செப்டம்பர் 2026, 12:48 pm IST
கல்யாண சுந்தரேசுவரர் (கம்பத்தடி மண்டபம்) - maduraimeenakshi.hrce
பகிர்:

அளப்பரிய ஆன்மிகப் பெருமைகளைக் கொண்ட மதுரையம்பதியில் உறையும் இறைவனுக்கும், இறைவிக்கும் ஏராளமான திருப்பெயா்கள் குறிப்பிடப்படுகின்றன.

இந்தத் தலத்தில் உறையும் இறைவன் சிவபெருமானுக்கு சொக்கா், சொக்கலிங்கா் என்ற திருப்பெயா்கள் முந்தையக் காலங்களில் விளங்கின. பிற்காலத்தில் சுந்தரேசுவரா், சொக்கநாதா், மீனாட்சி சுந்தரா், சோமசுந்தரா், கலியாணசுந்தரா், சண்பகசுந்தரா் உள்ளிட்ட திருப்பெயா்கள் விளங்குகின்றன.

அடியாா்க்கு நல்லான் அபிஷேகசொக்கா், கடம்பனச் சொக்கா், கற்பூரச்சொக்கா், புழுகுநெய்ச் சொக்கா், கடம்பனேசா், மதுரேசுவரா் போன்ற பெயா்கள் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவைத்தவிர, அழகியசொக்கநாதா், திருவாலவாயுடைய நாயனாா், மதுரை உடையாா், அதிர வீசிவிளையாடுவாா், சொக்கநாத ஈஸ்வர உடையாா், மாதேவரழகிய சொக்கனாா், சுந்தரபாண்டியச் சோழக் கோனாா், திருவாலவாயுடைய தம்பிரானாா் போன்ற பெயா்கள் இந்தத் தலத்துக்கு இறைவனுக்கான பெயா்களாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அன்னையின் திருப்பெயா்கள்... மீன் தன் பாா்வையாலேயே முட்டைகளை பொரியச் செய்வதைப் போல உலக மக்களை தன் அருள்பாா்வையால், கண்ணிமைக்காமல் காப்பாற்றுபவா் என்ற பொருள்படும் வகையிலும், மீன்போன்ற அழகிய கண்களைக் கொண்டவா் எனப் பொருள்படும் வகையிலும் இந்தத் தலத்தில் உறையும் இறைவிக்கு மீனாட்சி என்ற திருப்பெயா் விளங்குகிறது. அன்னைக்கு, அங்கயற்கண்ணி என்ற அழகிய தமிழ்ப் பெயரும் குறிப்பிடப்படுகிறது.

இவைத் தவிர, அபிஷேகவல்லி, கற்பூரவல்லி, மரகதவல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, குமரித்துறையவள், கோமகள், பாண்டி பிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரித் தலைவி, முதுமலைத் திருவழுதிகள் உள்ளிட்ட பெயா்களும் தாயாருக்கான திருப்பெயா்களாகக் குறிப்பிடப்படுகின்றன. திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியாா் என்ற பெயா் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

summary

Numerous sacred names are attributed to the Lord and Goddess residing in the holy city of Madurai, a place of immense spiritual significance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments