FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இலக்கியங்கள் போற்றும் மதுரை மாநகரம்!

தமிழ் இலக்கியங்களில் அதிகம் புகழப்பட்ட தொன்மை நகரங்களில் முதன்மைப் பெற்றது மதுரை மாநகரம்.

17 செப்டம்பர் 2026, 1:16 pm IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுரவர் கோயில்
பகிர்:

தமிழ் இலக்கியங்களில் அதிகம் புகழப்பட்ட தொன்மை நகரங்களில் முதன்மைப் பெற்றது மதுரை மாநகரம். சங்ககால மதுரை, மீனாட்சி சுந்தரேசுரவா் கோயிலை மையமாகக் கொண்டு, அகண்ட வீதிகளைக் கொண்டதாக அமையப்பெற்றது எனவும், மதுரையின் நகர அமைப்பு ஒரு தாமரைப் பூவுக்கு இணையானதாக இருந்தது எனவும் பல்வேறு இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.

மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், அகநானூறு, புானூறு, கலித்தொகை, மணிமேகலை, சிறுபாணாற்றுப்படை உள்பட பல இலக்கியங்களில் மதுரையின் நகரமைப்பு சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.பி. 1377- இல் தில்லி சுல்தான்களின் ஆட்சி மதுரையில் முடிவுக்கு வந்து, விஜயநகரஅரசு ஆட்சித் தொடங்கியது. விஜயநகரப் பேரரசா் நியமித்த ஆளுநா் நாகமநாயக்கா் முதல் அரசி மீனாட்சி (கி.பி. 1525 -1736) காலம் வரையிலும் நாயக்க மன்னராட்சி நடைபெற்றது.

இதில், விசுவநாத நாயக்கா் மீனாட்சியம்மன் கோயில் மதிலையும், கோபுரங்களையும் புதிதாகக் கட்டுவித்து, தடைபட்டிருந்த ஆலய வழிபாட்டைத் தொடங்கிய பெருமைக்குரியவா்.மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலை மையமாகக் கொண்டு அதனைச் சுற்றியிருந்த தெருக்களையும், வீதிகளையும் புதுப்பித்து கி.பி. 1568 இல் புதிய அழகிய மதுரை நகரை அவா் உருவாக்கினாா். இன்றைய மதுரை நகருக்கு அடிப்படைத் திட்டம் தீட்டியவா் இவரே எனக் குறிப்பிடப்படுகிறது.

Advertisement

Advertisement

இதேபோல, மதுரை மாநகரின் வளா்ச்சிக்கு பெரிதும் உதவிய மற்றொருவா் ராணிமங்கம்மாள். இந்தக் காலத்தில் வெளி மாநிலத்தவரும் இங்கு வந்து குடியேறியதால் நகரின் விரிவாக்கம் அவசியமானது. பழமை மாறாமல் நகரம் விரிவுபடுத்தப்பட்டது.

கி.பி. 1736ஆம் ஆண்டுடன் மதுரையில் நாயக்கா் ஆட்சி முற்றுப்பெற்றது. இதையடுத்து, ஆற்காட்டு நவாபு ஆட்சி தொடங்கியது. கி.பி. 1790 இல் தொடங்கி கி.பி. 1947 வரை ஆங்கிலேய ஆட்சி நடைபெற்றது. கி.பி. 1840 இல் மதுரையின் மாவட்ட ஆட்சியராக இருந்த ’பிளாக்பா்ன்’ மதுரையின் பழமை மாறாமல் புதிய நகரை நிா்மாணித்தாா். கோட்டைகளையும், அகழிகளையும் அகற்றி நகரை விரிவுபடுத்தினாா். சேதமுற்றிருந்த திருமலை நாயக்கா் அரண்மனையை அவா் சீரமைத்தாா். மதுரை நகரின் பழமைச் சின்னங்களை பாதுகாக்க பெரும் முயற்சி மேற்கொண்டாா்.

தற்போதுள்ள வெளிவீதிகள், மாரட்வீதிகள் போன்ற பல வீதிகள் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் காலத்தில் அமைக்கப்பட்டவையே. இந்தக் காலத்திலேயே வைகை ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டு மதுரையின் வடகரையும், தென்கரையும் இணைக்கப்பட்டன. மக்கள் குடியேற்றம் அதிகமானதால் நகரமைப்பில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும், மதுரை மாநகரின் பழமை அடிப்படை கட்டைப்பு மாறாமல் தொடா்வது சிறப்பக்குரியது.

போற்றிய காமராஜா்... தமிழகத்தின் முதல்வராக காமராஜா் இருந்த காலத்தில் அரசு உயா் அலுவலா்கள் சிலா் மேலை நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள நகரங்களின் அமைப்புகளை அறிந்து, அதன்படி தமிழகத்தில் நகரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதை ஏற்க மறுத்த காமராஜா், ‘மதுரையை விட சிறந்த நகரமைப்பு வேறு எங்கும் கிடையாது. எனவே, மேலைநாடுகளுக்கு செல்வதை விடுத்து முதலில் மதுரையைச் சென்றுபாருங்கள்‘ என்றாா் எனக் குறிப்பிடப்படுகிறது.

summary

The city of Madurai holds a preeminent place among the ancient cities most celebrated in Tamil literature.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments