சாடிவயல் கும்கி முகாமில் விநாயகர் சதுர்த்தி
கோவையை அடுத்த சாடிவயல் கும்கி யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கோவையை அடுத்த சாடிவயல் கும்கி யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கோவையை அடுத்த சாடிவயலில் கும்கி யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் சேரன் (32), ஜான் (25) ஆகிய இரு கும்கி யானைகள் உள்ளன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கும்கிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. பின்பு சேரன், ஜான் ஆகியவற்றுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வனத் துறை சார்பில் பழங்கள், சத்துமாவு உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் போளுவாம்பட்டி வனச் சரகர் பழனிராஜா, வனத் துறை ஊழியர்கள், பாகன்கள் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.