காஞ்சி ஏகாம்பரர் கோயிலில் ரூ. 30 கோடி தங்கத் தேர்! ஜூலை 12-ல் வீதியுலா!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தேர் திருவிழா நடைபெறுவது தொடர்பாக..
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் ஜூன் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கத்தேர் திருவிழா நடைபெற இருப்பதாகவும், அவ்விழாவில் அமைச்சர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்க இருப்பதாகவும் அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகப் போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். இக்கோயிலுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக ரூ. 30 கோடி மதிப்பில் தங்கத்தேர் செய்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முதலாக 25 அடி உயரம்,13 அடி நீளம்,10 அடி அகலத்தில் மிகுந்த தொழில் நுட்பங்களுடன் தங்கத்தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தேர் திருவிழா வரும் ஜீன் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதரின் சிறப்பு அலங்காரத்துடன் நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர்கள் ச.சீனிவாசன் மற்றும் கதிரவன் ஆகியோர் தெரிவித்தது.
தங்கத்தேர் திருவிழா காஞ்சிபுரம் மாநகரில் ராஜவீதிகளில் முதல் முதலாக நடைபெறவுள்ளது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள், ஆதீனங்கள், மக்களவை மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம். வேல் மோகன் மற்றும் உறுப்பினர்கள்,அறநிலையத் துறை இணை ஆணையர் சி. குமரதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலரும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
Advertisement
Advertisement
ஜூலை 12 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கும் விழாவில் 108 தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள், 1000 சிவனடியார்களின் சிவ வாத்தியங்கள் இசைத்தல், திருப்பூர் காவடி குழு, கொங்கு மண்டல கும்மிப்பாட்டு, சிலம்பாட்டம், சிறப்பு வானவேடிக்கைகளும் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
The Golden Chariot festival will take place at the Kanchipuram Ekambaranathar Temple on Sunday, June 12.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.