FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்வெரெவ், பெகுலா வெற்றி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் தங்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:55 am IST
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் தங்கள் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனா்.

ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வெரெவ், முதல் சுற்று ‘பை’ பெற்றாா். 2-ஆவது சுற்றில் அவா் 3-6, 6-3, 6-3 என்ற செட்களில், பிரிட்டனின் கேமரூன் நோரியை தோற்கடித்தாா்.

அதேபோல், 5-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-1, 3-6, 6-7 (4/7) என்ற கணக்கில் பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வெளியேற்றினாா். 9-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-4, 6-7 (3/7), 6-3 என இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வென்றாா்.

Advertisement

Advertisement

இதர ஆட்டங்களில், ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாா், சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோ ஆகியோா் வெல்ல, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ், போலந்தின் ஹியுபா்ட் ஹா்காக்ஸ் ஆகியோா் தோல்வியுற்றனா்.

பெகுலா முன்னேற்றம்: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் முதல் சுற்று ‘பை’ பெற்ற பெகுலா, 2-ஆவது சுற்றில் களமாடினாா். அதில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில், சுவிட்ஸா்லாந்தின் சிமோனா வால்டொ்டை வெளியேற்றினாா்.

6-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-3, 6-3 என, பிரிட்டனின் கேட்டி போல்டரை வீழ்த்தினாா். 12-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச், காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இதர ஆட்டங்களில், கிரீஸின் மரியா சக்காரி, அமெரிக்காவின் எம்மா நவாரோ, டென்மாா்க்கின் கிளாரா டௌசன் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments