காமன்வெல்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ஹர்ஜிந்தர் கௌர்!
மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் கௌர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளதைப் பற்றி...
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் கௌர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 தொடங்கின. வருகிற ஆக. 2-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளர். இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில், மகளிருக்கான 69 எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் கௌர் கலந்துகொண்டார்.
Advertisement
Advertisement
2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் 71 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த 29 வயதான ஹர்விந்தர், நடப்பு காமன்வெல்த் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் இரண்டிலும் புதிய சாதனை படைத்து அசத்தினார்.
ஸ்னாட்ச் பிரிவில் முதலில் 99 கிலோவும் அதன்பின்னர் 101 கிலோவும் தூக்கிய ஹர்விந்தர், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதலில் 123 கிலோவும், அதன்பின்னர் 126 கிலோவும் என மொத்தமாக 227 கிலோ எடையைத் தூக்கி புதிய சாதனை படைத்தார்.
கனடா வீராங்கனை சார்லட் சைமோனோ ஸ்னாட்ச் பிரிவில் 108 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 132 கிலோவும் என மொத்தம் 240 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதனால், ஹர்விந்தருக்கு இரண்டாம் இடத்துக்கான வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதுவரை 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களுடன் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
India's Harjinder Kaur produced a brilliant performance to win the women's 69kg weightlifting silver medal at the Commonwealth Games, breaking Games records in both the snatch and clean and jerk.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.