முகப்பு
கிரிக்கெட்

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்! கோவா அணி கேப்டனாகிறாரா?

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்..

Updated On : 2 ஏப்ரல் 2025, 2:54 pm IST
ஜெய்ஸ்வால் - படம்: ஏபி
பகிர்:

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்தத் தொடர் சொல்லும் படியாக அமையவில்லை. 3 போட்டிகளில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இவர் தற்போது மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையின்மைச் சான்று கோரி விண்ணப்பித்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் கோவாவுக்குச் செல்லவிருப்பதாகவும், 2025- 26 தொடரில் கோவா அணியை அவர் தலைமைத் தாங்குவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

23 வயதான ஜெய்ஸ்வால் 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை 36 போட்டிகளில் விளையாடி 12 சதம், 12 அரைசதம் உள்பட 3712 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 391 ரன்கள் குவித்திருந்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லாட் ஆகியோரும் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.