இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சதம் விளாசிய டெவான் கான்வே; வலுவான நிலையில் நியூசி.!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நேற்று (ஆகஸ்ட் 7) தொடங்கியது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
Advertisement
Advertisement
டெவான் கான்வே சதம்; வலுவான நிலையில் நியூசிலாந்து!
முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. டெவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கோப் டஃபி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 8) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேக்கோப் டஃபி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, டெவான் கான்வேவுடன் ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறது.
களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக சதம் விளாசி அசத்தினார். அவர் கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஹென்றி நிக்கோல்ஸ் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.
சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே 245 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகள் அடங்கும்.
கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க, நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 200 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
New Zealand opener Devan Conway impressed with a century in the second Test against Zimbabwe.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.