FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

15 பிப்ரவரி 2025, 11:16 am IST
பாபர் அசாம் (கோப்புப் படம்)
பகிர்:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யுப் ஜாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் நான்கு நாள்களில் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

பாபர் அசாமுக்கு ஆதரவு

பிப்ரவரி 19 முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பாபர் அசாம் களமிறங்க வேண்டும் என அந்த அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ஆக்யுப் ஜாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் பாபர் அசாமை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ஆலோசித்து வருகிறோம். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். அதன் பின், சைம் ஆயூபுக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக, டெஸ்ட் போட்டிகளிலும் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

பாகிஸ்தானில் உள்ள ஆடுகளங்கள் தொடக்க வீரர்களாக களமிறங்குபவர்களுக்கு மிகுந்த சவாலானதாக இருக்காது. பேட்ஸ்மேன்களால் பவர் பிளே ஓவர்களில் நன்றாக ரன்கள் குவிக்க முடியும். பவர் பிளே ஓவர்களை எங்களது சிறந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதனால், இந்த ஆடுகளங்களில் பாபர் அசாம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என நினைக்கிறேன். முக்கியமான போட்டிகளில் அவர் நன்றாக விளையாடிய அதிக ரன்கள் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments