இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலிருந்து பாபர் அசாம் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாபர் அசாம் விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாபர் அசாம் விலகியுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 19) தொடங்குகிறது.
இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
பயிற்சி ஆட்டத்தின்போது, கேப்டன் பாபர் அசாமுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அவர் விளையாடமாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை சல்மான் அலி அகா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். லார்ட்ஸில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது. முதல் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னவடைவாக பார்க்கப்படுகிறது.
அண்மையில் மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Babar Azam has withdrawn from the first Test match against England due to injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.