சிட்னி டெஸ்ட்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகல்!
சிட்னி டெஸ்ட்: இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிட்னி டெஸ்ட்டில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 வது மற்றும் கடைசிப் போட்டி நாளை(ஜன.3) சிட்னியில் நடைபெறவிருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்ற நிலையில், ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இதனால், தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது.
போட்டிக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து முதுகு வலி காரணமாக விலகுவதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement
ஆகாஷ் தீப்புக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய முன்னணி வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் அறிமுகமானார். 5 போட்டிகளில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அணியில் சேர்க்கப்பட்ட ஆகாஷ் தீப், சிறப்பாக பேட்டிங் செய்ததுடன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த போட்டியான மெல்பர்ன் டெஸ்ட்டில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.