முகப்பு
கிரிக்கெட்

மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் ஏபிடி வில்லியர்ஸ்! ஆர்சிபியில் விளையாடுவாரா?

முன்னாள் தெ.ஆ.வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

Updated On : 22 ஜனவரி 2025, 4:22 pm IST
ஏபி டி வில்லியர்ஸ்
பகிர்:

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ். 16 பந்துகளில் 50, 31 பந்துகளில் 100, 64 பந்துகளில் 150 ரன்கள் குவித்த சாதனைப் பட்டியலில் தன் பெயரை உயரத்தில் வைத்துள்ளார்.

கடந்த 2021 முதல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்த ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப்பில் கிரிக்கெட் குறித்து விடியோ வெளியிட்டு வருகிறார்.

Advertisement

Advertisement

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட ஓய்வை அறிவித்ததாகக் கூறியிருந்தார். அவருக்கு ஆப்ரஹாம், ஜான் என்ற 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

40 வயதாகும் ஏபிடி வில்லியர்ஸுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 360 டிகிரியிலும் அடித்து விளையாடக்கூடிய மிகச் சிறந்த வீரர்.

யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:

ஒருநாள் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன். ஆனால், எங்கு என்பது தெரியாது. எனகு குழந்தைகள் எனக்கு அழுத்தம் தருகிறார்கள். அவர்களால் நான் வலைப்பயிற்சிக்கு செல்கிறேன்.

எனது பையன் எனக்கு பந்துவீசும் உபகரணத்தில் பந்துவீசுவான். ஐபிஎல் அல்லது எஸ்ஏ20 விளையாட மாட்டேன். ஆனால், கேமிராக்களால் கவனம்பெறாத நிஜமான கிரிக்கெட் விளையாடுவேன். என்னுடைய ஈடுபாட்டான கிரிக்கெட்டை முடித்துவிட்டேன்.

வலது கண் நன்றாக வேலை செய்கிறது. இடதுகண் தான் சிறதி மங்கலாக இருக்கிறது. நான் எனது குழந்தைகளுக்காக மீண்டும் விளையாட விருக்கிறேன்.

ஆர்சிபி குறித்து பேசவில்லை. நான் மீண்டும் அந்த அழுத்தத்தை ஏற்க விரும்பவில்லை. நான் எங்கு சென்றாலும் எனக்கு ஜாலியாக இருக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments