FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லார்ட்ஸ் டெஸ்ட்டில் வென்றும் 3-வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்து!

லார்ட்ஸ் டெஸ்ட்டில் வென்றும் 3-வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியைப் பற்றி...

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - ( படம் | ஏபி)
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றும் இங்கிலாந்து அணி 3-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றதன்மூலம், தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, போட்டி நேரத்தைவிட 2 ஓவர்கள் மெதுவாகப் பந்துவீசி, சரியான நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காத காரணத்துக்காக போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் 10 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளார்.

ஐசிசியின் சட்டவிதிகள் 2.22-ன் படி, இங்கிலாந்து அணி வீரர்கள், மாற்று வீரர்கள், வீரர்களின் பணியாளர்கள் என அனைவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஐசிசியின் சட்டப்பிரிவு 16.11.2-ன் கீழ் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரில் விளையாடும் அணிகள் மெதுவாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளிகள் வீதம் குறைக்கப்படும். அதன்படி, இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கான 36 புள்ளிகளில் 24-லிருந்து 22 ஆகக் குறைந்துள்ளது. இதனால், 66.67 சதவிகிதத்திலிருந்து 61.11 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது. இதனால், இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சரிந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் அணிகளின் தரவரிசை

  • ஆஸ்திரேலியா - 100 சதவிகிதம்

  • இலங்கை - 66.67 சதவிகிதம்

  • இங்கிலாந்து - 61.11 சதவிகிதம்

  • இந்தியா - 33.33 சதவிகிதம்

  • வங்கதேசம் - 16.67 சதவிகிதம்

  • மேற்கிந்திய தீவுகள் - 0

  • நியூசிலாந்து - 0

  • பாகிஸ்தான் - 0

  • தென்னாப்பிரிக்கா - 0

England docked WTC points for slow over-rate in Lord's Test, slip to 3rd in standings

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments