‘தல ஃபார் ரீசன்’ என்றே போற்றப்படுவீர்கள்! - தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
‘தல ஃபார் ரீஸன்’ என்றே போற்றப்படுவீர்கள் என்று தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளதைப் பற்றி...
‘தல ஃபார் ரீஸன்’ என்றே போற்றப்படுவீர்கள் என்று வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
லெஜண்டரி வீரர்களுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஐசிசி சார்பில் ஹால் ஆஃப் ஃபேமில்(வாழ்நாள் சாதனையாளர்) இடம்பெற்றுள்ள வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் நேற்று (ஜூன் 9) அறிவிக்கப்பட்டது.
ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இன்று அறிவிக்கப்பட்ட 7 பேரில் இந்திய அணிக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வென்று தந்த முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 கோப்பை வென்று தந்தவருமான மகேந்திர சிங் தோனியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ள 11-வது இந்திய வீரர் என்ற பெருமையும் தோனி பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளார்.
அந்தப் பதிவில், “ஐசிசியின் ஹால் ஃபேமில் இடம்பெற்ற தோனிக்கு வாழ்த்துகள். அதிகமுறை ஒருநாள் தொடருக்கான அணியை வழிநடத்தியது தொடங்கி, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்த கேப்டன் என புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
அமைதியால் தலைமைப் பண்புக்கு புதிய வடிவம் கொடுத்துள்ளீர்கள். தெளிவு மற்றும் உறுதியின் மூலம் ஒரு தலைமுறையை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். மேலும், விக்கெட் கீப்பிங்கை ஒரு கலையாகவும் மாற்றியுள்ளீர்கள்.
உங்களின் பயணம் கிரிக்கெட் வரலாற்றில் புதிய இடத்தைப் பிடித்துள்ளது. நீங்கள் எப்போதும் தல ஃபார் ரீஸன் என புகழப்படுவீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.