FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Updated On : 14 ஜூன் 2025, 5:27 pm IST
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் - படம் | AP
பகிர்:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Advertisement

Advertisement

இதன் மூலம், 27 ஆண்டுகளில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அய்டன் மார்க்ரம் சதம் விளாசியும், கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் கடந்தும் அசத்தினர். அய்டன் மார்க்ரம் 207 பந்துகளில் 136 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். கேப்டன் டெம்பா பவுமா 66 ரன்கள் எடுத்தார். வியான் முல்டர் 27 ரன்களும் டேவிட் பெடிங்ஹம் 21 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்ட அய்டன் மார்க்ரம் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments