இந்திய வீரர்களுடன் சண்டையிட்ட பயிற்சியாளர்... படங்கள்: எக்ஸ் / ரே ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்
கிரிக்கெட்

இந்திய வீரர்களுடன் சண்டையிட்ட பயிற்சியாளர்..! வைரலாகும் விடியோ!

இந்திய அணியின் பயிற்சியாளர் வீரர்களுடன் சண்டையிட்டது குறித்து...

DIN

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சண்டையிட்ட விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் 373 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அடுத்த போட்டி ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி எடுத்துவரும்போது இந்திய வீரர்களுடன் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சண்டையிட்ட விடியோ காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன.

இதில் இவர்கள் நிஜமாகவே அடித்துக்கொள்ளவில்லை, டபிள்யூடபிள்யூஇ விளையாட்டைப் போல கிண்டலாக நடித்து வந்தார்கள்.

இந்த சம்பவத்தை விடியோவாக எடுத்த ரே ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “வலைப்பயிற்சியில் என்டர்டெயின்மென்ட் இருக்காது என யார்க் கூறியது?” எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது.

During India’s practice session at Edgbaston, Arshdeep Singh and Akash Deep were seen rolling their arms at the nets, hinting at the change in the pace attack for the crucial second Test against England. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற கணவன் கைது

அரக்கோணத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை அட்டை முகாம்

கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் 3 மாதங்களில் ‘பெட் ஸ்கேன்’ மையம்

புத்தாண்டு சபதங்கள்!

திமிரி ஒன்றியத்துக்கு மத்திய அரசின் தங்கப் பதக்கம்: ஆட்சியா் பெருமிதம்

SCROLL FOR NEXT