ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து வேகப்பந்துவீச்சு பயிற்சியாளரான முன்னாள் ஆஸி. வீரர்!
ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. வீரர் நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் சாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால், ஆஷஸ் கோப்பைத் தக்கவைக்க இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாகும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து பயிற்சி ஆலோசகராக நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சௌதி நியமிக்கப்பட்டிருந்தார்.
Advertisement
Advertisement
அவர் சர்வதேச லெஜண்ட்ஸ் லீக்கில் விளையாடவிருப்பதால், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் சாகர் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லையன்ஸ்க்கு எதிரான போட்டியில் சௌதி மற்றும் சாகர் இருவரும் மேற்பார்வையிடுவார்கள். அதன்பின்னர், சாகர் முழுநேரப் பயிற்சியாளராக அணியில் இணைந்துகொள்வார்.
டேவிட் சாகர், இங்கிலாந்து அணியுடன் இணைவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னதாக அவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார்.
2010-2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஆஷஸ் கோப்பையை வெல்லுவதிலும் முக்கியப் பங்காற்றினார். மேலும், 2022 ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பையை வென்ற போதும், 2023 ஆம் ஆண்டு ஆஷஸ், ஒருநாள் உலகக் கோப்பையின் போதும் இங்கிலாந்து அணியுடன் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
இங்கிலாந்து அணி இதுவரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஒருமுறைகூட வென்றது. 2011 ஆம் ஆண்டில் இருந்து 5-0, 4-0, 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் ஒரு முறை மட்டுமே கோப்பையை தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
England appoint David Saker as fast bowling coach ahead of Ashes 2025-26
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.