இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்திய அணி அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி...
காலேயில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் கடந்த ஆக. 15 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 462/10 ரன்களும், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 284/10 ரன்களும் எடுத்தனர்.
தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், இலங்கை அணியின் வெற்றிக்கு 372 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.
Advertisement
Advertisement
இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இலங்கை அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5-ஆம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவுக்கு 6 விக்கெட்டுகளும், இலங்கை வெற்றிக்கு 288 ரன்களும் தேவையாக இருந்தன.
கேப்டன் தனஞ்ஜெயா 31* ரன்களுடனும், சோனல் தினுஷா 25* ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில், இருவரும் நிதானமாக விளையாடி, அரைசதம் கடந்தனர்.
சோனல் தினுஷா 8 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 84 ரன்களும், கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 7 பௌண்டரிகளுடன் 59 ரன்களும் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
அடுத்து வந்த விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 10 ரன்களும், நுவந்தா 20 ரன்களும் எடுக்க, ஜெயசூர்யா, லஹிரு குமாரா இவரும் ரன் ஏதுமின்றி டக்-அவுட்டாகினர்.
77.4 ஓவர்களில் இலங்கை அணி 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இலங்கையின் வீரர்களை சுழற்றிய இந்திய வீரர் மானவ் சுதர் 55 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து இந்திய அணி வீரர் மானவ் சுதர் 10 விக்கெட்டுகளை அள்ளினார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 211 ரன்கள் குவித்த தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டி வருகிற ஆக. 23 ஆம் தேதி கொழும்புவில் நடைபெறுகிறது.
India overcame a stubborn Sri Lankan resistance on the final day to seal a 165-run win in the Galle Test. Manav Suthar picked up 6 wickets for 55 runs and guided India to a victory in the opening Test of the series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.