FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

2-வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு; 64 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மிட்செல் ஸ்டார்க் - படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஆகஸ்ட் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.

மிட்செல் ஸ்டார்க் அபாரம்; 64 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம்!

Advertisement

Advertisement

முதல் இன்னிங்ஸில் விளையாடிய வங்கதேசம் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷாத்மன் இஸ்லாமின் விக்கெட்டினை கைப்பற்றி அசத்தினார் மிட்செல் ஸ்டார்க். அதன் பின், தன்சித் ஹாசன் 0 ரன், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 0 ரன், மோமினுல் ஹேக் 9 ரன்கள் என அடுத்தடுத்து அனைவரும் மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்கதேசம் 10 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன் பின், முஷ்பிகர் ரஹீம் 5 ரன்கள், லிட்டன் தாஸ் 0 ரன், மெஹிதி ஹாசன் மிராஸ் 11 ரன்கள், ஹாசன் மஹ்முத் 10 ரன்கள், டஸ்கின் அகமது ஒரு ரன், ஷோரிஃபுல் இஸ்லாம் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதில் 4 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதில் 6 மெய்டன் ஓவர்கள் அடங்கும். பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா 101 ரன்கள் முன்னிலை!

வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் 22 ரன்கள், மாட் ரென்ஷா 8 ரன்கள் எடுத்தனர். மார்னஸ் லபுஷேன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தனர். இந்த இண நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய கேமரூன் கிரீன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். அவர் 81 பந்துகளில் 51 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் நாதன் லயன் 10 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தைக் காட்டிலும் 101 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

summary

Batting first in the second Test match against Australia, Bangladesh was bowled out for 64 runs in the first innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments