FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சதத்தை நோக்கி துருவ் ஜுரெல்..! 475 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் வலுவான நிலையில் இருக்கும் இந்தியா குறித்து...

துருவ் ஜுரெல் - படம்: ஏபி
பகிர்:

கொழும்பில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 475 ரன்களுடன் மிக வலுவான நிலையில் இருக்கிறது.

நேற்று (ஆக.23) தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் இரண்டாம் நாள் தேநீர் முடிவு வரைக்கும் இந்திய அணி 475 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தப் போட்டியில் முதல் நாளில் தேவ்தத் படிக்கல் சதம் அடித்து 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஷுப்மன் கில், ரிஷப் பந்த் அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

Advertisement

Advertisement

இரண்டாம் நாளான இன்று ஜடேஜா 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, துருவ் ஜுரெல் நிதானமாக விளையாடி 95 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, மழை குறுக்கிட்டுள்ளதால் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டுள்ளது. களத்தில் துருவ் ஜுரெல் 95*, முகமது சிராஜ் ரன் ஏதுமின்றி இருக்கிறார்கள்.

இலங்கை சார்பில் அசிதோ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கேஷவரா நுவாந்த 2 விக்கெட்டுகளும் லஹுரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

summary

Dhruv Jurel 95 and india strong at tea break against Srilanka second test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments