ஜெய்ஸ்வால் - பெர்னான்டோவிற்கு 25% அபராதம், ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கிய ஐசிசி!
மோதலில் ஈடுபட்ட ஜெய்ஸ்வால் மற்றும் பெர்னான்டோ ஆகிய இருவருக்குமே ஐசிசி அபராதம் விதித்துள்ளது குறித்து...
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வீரர் அசிதா பெர்னான்டோ ஆகிய இருவருக்குமே ஐசிசி 25 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது.
கொழும்பில் நேற்று (ஆக.23) தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இதில் இரண்டாம் நாள் தேநீர் முடிவு வரைக்கும் இந்திய அணி 475 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை பந்துவீச்சாளர் அசிதா பெர்னான்டோ ஏதோ கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அது மோதலுக்கும் இட்டுச் சென்றது.
Advertisement
Advertisement
தற்போது இதனால் ஐசிசியின் விதிகளை மீறியதால் இருவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட இருவருக்குமே ஐசிசி அபராதம் மட்டுமில்லாமல் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கியுள்ளது.
ஐசிசியின் 2.12 விதியினை மீறியுள்ளதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 24 மாதங்களில் இரண்டு வீரர்களும் தங்களது முதல் தகுதி இழப்புப் புள்ளியைப் பெற்றுள்ளார்கள்.
Jaiswal, Fernando fined 25 percent of match fee for heated exchange
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.