பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: இங்கிலாந்தைக் காப்பாற்றிய காக்ஸ் - ஸ்மித் கூட்டணி!
இங்கிலாந்து - பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து...
இங்கிலாந்து - பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று மாலை லண்டனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மழையின் காரணமாக இந்தப் போட்டி தாமதமாகவே நடைபெற்றதால் 56 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 248 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
இங்கிலாந்து அணியின் ஜோர்டான் காக்ஸ் 55 ரன்கள் எடுக்க டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பின்னர், லோயர் ஆர்டர் பேட்டர்களில் கீப்பர் ஜேமி ஸ்மித் 61 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவருடன் முகமது அலி 3 விக்கெட்டுகள் எடுத்து உதவினார்.
முதல் டெஸ்ட்டில் தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட்டில் கம்பேக் அளித்து வருகிறது. பேட்டிங்கில் இதேபோல் விளையாடினால் தொடரை சமன்செய்யும் வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. பாபர் அசாம் இரண்டாவது போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார். காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
Day 1: Stumps - Pakistan's superb bowling: Cox-Smith partnership saves England!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.