FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டன்களை மாற்றிய ஜிம்பாப்வே!

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான கேப்டன்களில் மாற்றம் செய்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 5:50 pm IST
ரிச்சர்ட் நிகராவா - படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான கேப்டன்களில் மாற்றம் செய்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணி அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் பின், டி20 தொடர் தொடங்குகிறது.

இந்த நிலையில், தேசிய அணிக்கான கேப்டன்களில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் மாற்றம் செய்து அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிச்சர்ட் நிகராவா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் ரிச்சர் நிகராவா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளுக்கான கேப்டனாக சிக்கந்தர் ராஸா தொடர்கிறார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஜிம்பாப்வே அணியின் துணைக் கேப்டனாக பிரையன் பென்னட், ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் துணைக் கேப்டனாக சிக்கந்தர் ராஸா மற்றும் டி20 போட்டிகளுக்கான துணைக் கேப்டனாக ரிச்சர்ட் நிகராவா நியமிக்கப்பட்டுள்ளனர்.

summary

Zimbabwe Cricket has announced changes to the captains across all formats of the game.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments