லார்ட்ஸ் டெஸ்ட்: ஸ்மிருதி மந்தனா மீண்டும் அசத்தல்; வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 269 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 269 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 115 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஸ்மிருதி மந்தனா அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!
Advertisement
Advertisement
115 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஷஃபாலி வர்மா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது போன்றே இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவர் 69 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் யாஷ்திகா பாட்டியா 39 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 269 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
முதல் இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 83 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
The Indian team is in a strong position with a lead of 269 runs in the Lord's Test match against England.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.