இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமனம்!
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த பிரண்டன் மெக்கல்லம் அண்மையில் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக தொடர்வார் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீஃபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஸ்டீஃபன் பிளெமிங்கின் பயிற்சியாளர் பதவிக் காலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக மார்கஸ் டிரெஸ்கோத்திக் செயல்படவுள்ளார்.
இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ஸ்டீஃபன் பிளெமிங், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை கௌரவமாக கருதுகிறேன் என்றார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீஃபன் பிளெமிங் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 18 ஆண்டுகள் செயல்பட்டு வந்தார். அண்மையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பிளெமிங் விலகியது குறிப்பிடத்தக்கது.
Stephen Fleming has been appointed as the new head coach of the England Test team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.