முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது ஆச்சரியமளிக்கிறது: முன்னாள் நியூசி. கேப்டன்
தொடர்ச்சியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெரமி கோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் அவர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், தொடர்ச்சியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜெரமி கோனி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே முகமது சிராஜ் விளையாடியிருப்பது சற்று ஆச்சரியமளிக்கிறது. மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். ஒரு டெஸ்ட்டில் சராசரியாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தக் கூடியவர். அவர் ஏன் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை எனத் தெரியவில்லை. இந்திய அணி இளம் வீரர்களை பிளேயிங் லெவனில் தேர்வு செய்ய நினைக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் மிகவும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தொடரை சமன் செய்வதற்கான கடைசிப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அணிக்கு உதவினார். அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து இடம்பெற வேண்டிய வீரர். அதனால், அவர் பிளேயிங் லெவனில் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது என்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 356 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியைக் காட்டிலும் இந்திய அணி 240 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.