ஆஷஸ் 2027 தொடரில் பங்கேற்பது சந்தேகம்..! ஓய்வு பற்றி அதிர்ச்சி அளித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வு குறித்து கூறியிருப்பதாவது...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் (37 வயது) தனது ஓய்வு குறித்து கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகக் கருதப்படும் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,920 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 53.97ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மித் 45 அரைசதங்கள், 37 சதங்கள், 4 இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக 41 போட்டிகளில் 3,683 ரன்கள் குவித்துள்ளார். அதில் 13 சதங்கள் அடங்கியிருக்கின்றன.
Advertisement
Advertisement
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனாமாக இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தாண்டு நடைபெறும் ஆஷஸ் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எனக் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ஸ்மித் கூறியிருப்பதாவது:
ஆஷஸ் தொடரில் இருப்பேனா எனத் தெரியவில்லை. நான் ஒவ்வொரு தொடராக கவனம் செலுத்துகிறேன். இப்போதைக்கு ஆஷஸ் வெகு தூரத்தில் இருக்கிறது. இங்கு ஒரு வெற்றி, அங்கொரு வெற்றி என பல ஆசைகள் இருக்கின்றன. காலம் கனிந்து வருகிறாதா என்று பார்க்கலாம்.
தற்போதைக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆசையாக இருக்கிறது. அதனால் ஆம்ஸ்டர்டம் அணியில் விளையாடி வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறேன்.
புதிய இடத்தில் விளையாட ஆர்வத்துடன் இருக்கிறேன். உள்ளூர் மற்றும் துணை கண்ட வீரர்களுடன் சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அது மிகவும் நன்றாக இருக்கிறது.
இப்போதும் என்னால் டி20 கிரிக்கெட் விளையாட முடியுமென நம்புகிறேன். ஓய்வுக்குப் பிறகு என்ன? இன்னும் சிறிது காலம் விளையாடுவேன் என நினைக்கிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அதிகமாகவே சாதித்து இருக்கிறேன். மகிழ்ச்சியுடன் இருந்துள்ளேன். இப்போதும் மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன். அதனால், எனக்கு கடைசிநாள் இப்போதைக்கு இல்லை; காத்திருந்து பார்போம். ஆனால், இது ஒரு நல்ல பயணம்தான் என்றார்.
Participation in the 2027 Ashes series in doubt...! Steve Smith drops a bombshell about retirement!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.