கடைசி ஒருநாள்: மூவர் அரைசதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 272 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மூவர் அரைசதம் விளாசல்; ஆஸ்திரேலியாவுக்கு 272 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் மூவர் அரைசதம் விளாசி அசத்தினர். இன்னோசண்ட் கையா 55 ரன்களும், கிரைக் எர்வின் 59 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சிக்கந்தர் ராஸா 72 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். பிரையன் பென்னட் 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
Batting first in the third ODI against Australia, Zimbabwe scored 271 runs for the loss of 8 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.