FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம், ஆனால்... தோல்விக்குப் பிறகு தோனி ஆதங்கம்!

சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் தோல்வியைத் தொடர்ந்து தோனி பேசியதாவது...

Updated On : 26 ஏப்ரல் 2025, 10:47 am IST
எம்.எஸ். தோனி - படம்: ஐபிஎல்
பகிர்:

சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் தோல்வியைத் தொடர்ந்து தோனி ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம் ஆனால் பலரும் சரியாக விளையாடமல் இருந்தால் கடினம் எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் உடனான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை 19.5 ஓவா்களில் 154 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் தோற்றது. சொந்த மண்ணில் இது சென்னைக்கு 4-ஆவது தோல்வியாகும்.

Advertisement

Advertisement

இது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் பேசியதாவது:

டெவால்டு ப்ரீவிஸ் சிறப்பாக விளையாடினார்

முதல் இன்னிங்ஸில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்துகொண்டே இருந்தோம். பிட்ச் நன்றாக இருந்தது. 155 ரன்கள் போதுமானதாக இல்லை. ஏனெனில் பிட்சில் பெரிதாக பந்து திரும்பவில்லை.

உண்மைதான், 8-10ஆவது ஓவர்களுக்குப் பிறகு பிட்ச் இரண்டு விதமாக செயல்பட ஆரம்பித்தது. ஆனால், பெரிதாக வித்தியாசமாக இல்லை.

எங்களது சுழல்பந்துவீச்சாளர்கள் சரியான இடங்களில் சிறப்பாக பந்துவீசினார்கள். கூடுதலாக 15-20 ரன்கள் அடித்திருக்கலாம்.

சுழல்பந்து வீச்சாளர்கள் வரும் தடுமாறி இருந்தோம். டெவால்டு ப்ரீவிஸ் சிறப்பாக விளையாடினார். அவர் விளையாடியது போலத்தான் மிடில் ஆர்டரில் எங்களுக்கு தேவைப்பட்டது.

ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம், ஆனால்...

ஒன்று நீங்கள் அடிக்க வேண்டும் அல்லது பார்ட்னர்ஷிப்பாவது அமைக்க வேண்டும். உங்களுக்கு சௌகரியமான இடங்களில் பெரிய ஷாட்டுகள் அடிக்கடி அடிக்க வேண்டும்.

இந்த மாதிரி தொடர்களில் ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைப்பது மாதிரி இருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடமல் இருந்தால் கடினம்.

அதிகமான வாய்ப்புகள் அளித்தும் ஒருவர் சரியாக விளையாடாததால் மற்றவருக்கு வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் நால்வரும் சரியாக விளையாடாமல் இருந்தால் மேலும் மாற்றங்களை செய்யவேண்டி இருக்கிறது. அப்படியே செல்ல முடியாது. ஏனெனில், ஆட்டம் மாறிவிட்டது. ரன்கள் குவிக்காவிட்டால் கடினம்.

எப்போதுமே 180-200 ரன்கள் அடிக்க வேண்டுமெனக் கூறவில்லை. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments