FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

10 ஆயிரம் ரன்கள், 300 கேட்சுகளுடன் தோனியின் சாதனை விவரங்கள்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் 2-ஆவது போட்டியில் மகேந்திர சிங் தோனி புதிய சாதனைகளைப் படைத்தார். 

Updated On : 15 ஜூலை 2018, 2:28 pm IST
பகிர்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 2-ஆவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 113 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றது. எனவே 3-ஆவது போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி இப்போட்டியில் இரு புதிய சாதனைகளைப் படைத்தார். அவற்றின் விவரம் பின்வருமாறு:

Advertisement

Advertisement

10 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-ஆவது இந்தியர்:

  • சச்சின் டெண்டுல்கர் - 463 போட்டிகள் - 18,426 ரன்கள்
  • சௌரவ் கங்குலி - 311 போட்டிகள் - 11,363 ரன்கள்
  • ராகுல் டிராவிட் - 344 போட்டிகள் - 10,889 ரன்கள்
  • மகேந்திர சிங் தோனி - 320 போட்டிகள் - 10,004 ரன்கள்

அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்:

  • குமார் சங்ககாரா - 360 போட்டிகள் - 13,341 ரன்கள்
  • மகேந்திர சிங் தோனி - 320 போட்டிகள் - 10,004 ரன்கள்
  • ஆடம் கில்கிறிஸ்ட் - 282 போட்டிகள் - 9,410 ரன்கள்

10 ஆயிரம் ரன்கள் கடந்தவர்களின் சிறந்த சராசரி:

  • மகேந்திர சிங் தோனி - 51.30
  • ஜாக்குவஸ் கலீஸ் - 45.45
  • ரிக்கி பாண்டிங் - 42.74
  • சச்சின் டெண்டுல்கர் - 42.37
  • சௌரவ் கங்குலி - 41.32

குறைந்த இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள்:

  • சச்சின் டெண்டுல்கர் - 259
  • சௌரவ் கங்குலி - 263
  • ரிக்கி பாண்டிங் - 266
  • ஜாக்குவஸ் கலீஸ் - 272
  • மகேந்திர சிங் தோனி - 273

இவற்றில் இதர வீரர்கள் அனைவரும் முதல் வரிசை வீரர்களாகவே இருந்தவர்கள். அதிலும் குறிப்பாக முதல் 3 இடங்களில் களமிறங்கியவர்கள். ஆனால் தோனி, பெரும்பாலும் 5 அல்லது 6-ஆவது இடங்களிலேயே களமிறங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் புதிய சாதனைப் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். மேலும் சர்வதேச அளவில் 4-ஆவது வீரராக உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள்:

  • ஆடம் கில்கிறிஸ்ட் - 417
  • மார்க் பௌச்சர் - 402
  • குமார் சங்ககாரா - 383
  • மகேந்திர சிங் தோனி - 300
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments