FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஓய்வு பெற்றார் கபடி வீரர் அனுப்குமார்

இந்திய கபடி அணியின் நட்சத்திர வீரர் அனுப்குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

இந்திய கபடி அணியின் நட்சத்திர வீரர் அனுப்குமார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006-இல் சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்ற அனுப்குமார், இரண்டு ஆசியப் போட்டிகளில் தலைமை தாங்கி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்தார். 
மேலும் 2016-இலும் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற உதவினார். புரோ கபடி 2-ஆவது சீசனில் யு மும்பா அணிக்கு தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் 15ஆண்டுகள் நாட்டுக்காக ஆடிய நிலையில் புதன்கிழமை பஞ்ச்குலாவில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அனுப்குமார். 
எனது ஓரே கனவான நாட்டுக்காக ஆடி, தங்கப் பதக்கம் பெற்றுத் தர வேண்டும் என்பதையும் நிறைவேற்றி மகிழ்ச்சியுடன்ஓய்வு பெறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் அனுப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments