ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரபல இங்கிலாந்து வீரர்!
2010-ல் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம் சர்வதேசக் கோப்பையை வென்ற முதல் இங்கிலாந்து கேப்டன்...
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் கோலிங்வுட், 2018 சீஸனுடன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
2010-ல் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம் சர்வதேசக் கோப்பையை வென்ற முதல் இங்கிலாந்து கேப்டன் என்கிற பெருமையை அவர் பெற்றார். 2011-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். துர்ஹம் கவுண்டிக்காக விளையாடி வருகிறார்.
68 டெஸ்டுகளும் 197 ஒருநாள், 36 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 42 வயது கோலிங்வுட். 1996-ல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை கிட்டத்தட்ட 17,000 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய முதல்தர கிரிக்கெட்டின் கடைசி ஆட்டம் செப்டம்பர் 24 அன்று நடைபெறவுள்ளது.
Advertisement