காமன்வெல்த் மல்யுத்தம்: ஒரே நாளில் மூன்று தங்கங்களைக் குவித்த இந்தியா
இன்று மேலும் ஆறு மல்யுத்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
காமன்வெல்த் போட்டிகளில் ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி.
இங்கிலாந்தின் பிர்மிங்கமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மல்யுத்த விளையாட்டில் நடைபெற்ற ஆறு போட்டிகளிலும் இந்திய அணி ஆறு பதக்கங்களை வென்று அசத்தியது. இதனால் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.
ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் புனியாவும் மகளிர் 62 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி மாலிக்கும் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் தீபக் புனியாவும் தங்கப் பதக்கங்களை வென்றார்கள். மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் அன்ஷு மாலிக் வெள்ளியும் மகளிர் 68 கிலோ எடைப்பிரிவில் திவ்யா காக்ரன் வெண்கலமும் ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவில் மோஹித் கிரேவால் வெண்கலமும் வென்றார்கள். இன்று மேலும் ஆறு மல்யுத்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.