FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம் (ஹைலைட்ஸ் விடியோ)

தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2022, 12:18 pm IST
எல்கர் ஆட்டமிழந்தபோது...
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா. முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களைத் தடுமாறச் செய்தார்கள். போப் மட்டும் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். 

Advertisement

Advertisement

மழை காரணமாக முதல் நாளன்று 32 ஓவர்கள் மட்டுமே வீச முடிந்தது. இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. தெ.ஆ. பந்துவீச்சாளர்கள் நோர்கியா 3 விக்கெட்டுகளும் ரபாடா 2 விக்கெட்டுகளும் யான்சென் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

இன்றும் தெ.ஆ.  பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியதால் இங்கிலாந்து அணி, 45 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் போல்ட் ஆனார். தெ.ஆ. பந்துவீச்சாளர்களில் ரபாடா 5 விக்கெட்டுகளும் நோர்கியா 3 விக்கெட்டுகளும் யான்சென் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

தென்னாப்பிரிக்க அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு எல்கரும் எர்வீயும் 85 ரன்கள் சேர்த்தார்கள். எர்வீ 73 ரன்களிலும் எல்கர் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். மஹாராஜ் 41 ரன்களும் மார்கோ யான்சென் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்து அணிக்குக் கூடுதல் ரன்கள் சேர்த்தார்கள். 2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 77 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 124 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments