FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்தியா தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு, கேப்டன் விலகல்!

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 டிசம்பர் 2022, 5:23 pm IST
டாம் லதம்
பகிர்:

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத் தொடருக்குப் பிறகு சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் ஜனவரி 18 அன்றும் டி20 தொடர் ஜனவரி 27 அன்றும் தொடங்குகின்றன.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் விளையாடும் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்தியா தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் டாம் லதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார். காயம் காரணமாக ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் இடம்பெறவில்லை. ஆல்ரவுண்டர் ஹென்றி ஷிப்லி அணியில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

இந்தியா ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி

டாம் லதம் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், கான்வே, ஜகோப் டுஃபி, லாகி ஃபெர்குசன், மேட் ஹென்றி, ஆடம் மில்ன், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிளிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments