முகப்பு
செய்திகள்

முதல் நாளில் வங்கதேச அணிக்கு நெருக்கடி அளித்த இந்திய ஏ அணி!

வங்கதேச ஏ அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Updated On : 29 நவம்பர் 2022, 4:32 pm IST
ஜெயிஸ்வால் (கோப்புப் படம்)
பகிர்:

வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்துள்ளது. அதற்கு முன்பு வங்கதேச ஏ அணி 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டிசம்பர் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 4 முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய ஏ அணி வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்டுகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது. 2-வது டெஸ்ட் டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது. இந்திய ஏ அணியின் தலைமைப் பயிற்சியாளராக செளராஷ்டிர முன்னாள் வீரர் ஷிதான்சு கொடாக்கும் டிராய் கூலி, வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் டி. திலீப்,ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

காக்ஸ் பஸாரில் தொடங்கிய முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி சிறப்பாகப் பந்துவீசியதால் முதல் 5 விக்கெட்டுகள் 26 ரன்களுக்கு வீழ்ந்தன. இதன்பிறகு மொசாடெக் ஹுசைன் பொறுப்பாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். எனினும் வங்கதேச ஏ அணி, 45 ஓவர்களில் 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம்பெற முடியாமல் போனால் அவருக்குப் பதிலாக விளையாடவுள்ள 29 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செளரப் குமார் 4 விக்கெட்டுகளையும் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

Advertisement

Advertisement

இந்திய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் வலுவாகத் தொடங்கியுள்ளது. முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி விக்கெட் இழப்பின்றி 36 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்துள்ளது. யாஷஸ்வி ஜெயிஸ்வால் 61 ரன்களும் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 53 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். இந்திய ஏ அணி முதல் நாளன்றே முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் மீதமுள்ள நிலையில் 8 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ராகுல் டிராவிடுடன் இணைந்து டிசம்பர் 1 அன்று வங்கதேசத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் டிசம்பர் 14 அன்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 22 அன்றும் தொடங்கவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments