கே.எல். ராகுல், ரிஷப் பந்துடன் போட்டியா?: சஞ்சு சாம்சன் பதில்
கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பந்த் என இருவரில் யாரை வெளியேற்றுவார் என்கிற...
இந்திய அணி வீரர்களுடன் தான் போட்டியிடவில்லை எனப் பிரபல வீரர் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பிரபல வீரரான சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் சஞ்சு சாம்சன் கூறியதாவது:
Advertisement
Advertisement
இந்திய அணியில் யாருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இடம்பெறுவார்? கே.எல். ராகுல் அல்லது ரிஷப் பந்த் என இருவரில் யாரை வெளியேற்றுவார் என்கிற ரீதியிலான பேச்சுகள் சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ஏற்படுகின்றன. என்னுடைய அணிக்காக ராகுல், பந்த் விளையாடுகிறார்கள் என்பதில் நான் தெளிவாக உள்ளேன். நான் என் அணி வீரர்களுடன் போட்டியிட்டால் அது என் நாட்டை கீழே இறக்குவதாக ஆகிவிடும். 5 வருடங்கள் கழித்து இந்திய அணியில் நான் இடம்பெற்றது அதிர்ஷ்டவசமானது. அப்போதும் இப்போதும் இந்திய அணி நெ.1 ஆகவே உள்ளது. 15 பேரில் ஒருவராக இந்திய அணியில் விளையாடுவது பெரிய விஷயம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.