செய்திகள்

கில் அதிரடி சதம்; புவனேஷ் அசத்தல் பந்து வீச்சு: ஹைதராபாத்திற்கு 189 ரன்கள் இலக்கு! 

DIN

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்தது.இந்தப் போட்டியில் குஜராத் அணி நீல இளஞ்சிவப்பு  நிற ஜெர்ஸியில் விளையாடியது.

முதல் ஓவரிலேயே சாஹா பூச்சியத்தில் ஆட்டமிழந்தாலும் கில் மற்றும் சாய் சுதர்ஷன் அட்டகாசமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்கள் குவித்தனர். 15வது ஓவரில் சாய் சுதர்ஷன் ஆட்டமிழந்தார். 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

கில் 58 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடக்கம். சாய் சுதர்ஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய குஜராத் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 188/9 ரன்கள் எடுத்தது. 

ஹைதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT