நெதர்லாந்து பேட்டிங்: முதல் வெற்றியை பெறுமா இலங்கை?
உலகக் கோப்பை லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
கடந்த அக்.5ஆம் தேதி முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் லீக் போட்டியில் 19வது போட்டியாக இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நெதர்லாந்து அணியில் மாற்றமில்லை. இலங்கை அணியில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா அபார வெற்றி!
Advertisement
Advertisement
நெதர்லாந்து அணி 9.5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் விக்ரமஜித் சிங் 4 ரன்களில் ரஜிதா ஓவரில் போல்ட் ஆனார்.
இதையும் படிக்க: மருத்துவமனையில் நடிகை சுனைனா: ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போது மேக்ஸ் டோட் (16)- கோலின் ஆக்கர்மன்(24) விளையாடி வருகிறார்கள்.
இலங்கை அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியாலாவது முதல் வெற்றியை பெறுமா என இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.