வாள்வீச்சு: பவானி தேவி ஏமாற்றம்
மகளிர் தனிநபர் சப்ரே பிரிவில் களமிறங்கிய தமிழக வீராங்கனை பவானி தேவி, குரூப் சுற்றில் தன்னை எதிர்கொண்ட 5 போட்டியாளர்களையுமே வென்றார்.
மகளிர் தனிநபர் சப்ரே பிரிவில் களமிறங்கிய தமிழக வீராங்கனை பவானி தேவி, குரூப் சுற்றில் தன்னை எதிர்கொண்ட 5 போட்டியாளர்களையுமே வென்றார். முதலில் சிங்கப்பூரின் ஜூலியட் ஜி மின் ஹெங்கையும் (5-2), அடுத்து சவூதி அரேபியாவின் அல்ஷ்னா அல்ஹமதையும் (5-1) சாய்த்த பவானி தேவி, 3-ஆவது ஆட்டத்தில் கரினா தோஸ்பேவை (5-3) சாய்த்தார். அடுத்த இரு மோதல்களில் உஸ்பெகிஸ்தானின் ஜேனாப் தயிபெகோவாவையும், வங்கதேசத்தின் ரோக்சனா காட்டுனையும் (5-1) வெற்றி கண்டார்.
இதனால் "பை' பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்த அவர், அதில் தாய்லாந்தின் டோங்காவ் போகேவை வீழ்த்தினார். எனினும் காலிறுதியில் சீனாவின் யாகி ஷாவிடம் 7-15 என தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். காலிறுதியில் வெல்லும் பட்சத்தில் பவானி தேவிக்கு முதல் ஆசிய பதக்கம் உறுதியாகியிருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.