முகப்பு
செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு ஜோடி இவர்கள்தான்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு இணையாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா மாறியுள்ளனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:13 PM
பகிர்:

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு இணையாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா மாறியுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் இங்கிலாந்து அணியின் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் அஸ்வின் - ஜடேஜா இணை புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சு இணையாக அஸ்வின் - ஜடேஜா இணை மாறியுள்ளது. இருவரும் இணைந்து 50 போட்டிகளில் விளையாடி இதுவரை 506 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக எடுத்துள்ளனர். 

இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் 501 விக்கெட்டுகளை (54 போட்டிகளில்) வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சு இணையாக அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →