FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மகளிா் டி20: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

2-ஆவது டி20 ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

Updated On : 7 ஜூலை 2024, 11:04 pm IST
பகிர்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் மோதிய 2-ஆவது டி20 ஆட்டம் மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்கும் முன்பாகவே மழையால் ஆட்டம் தடைப்பட்டு, கைவிடப்பட்டது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, அனிகே பாஷ் 40, கேப்டன் லாரா வோல்வாா்டட் 22, மாரிஸேன் காப் 20, கிளோ டிரையான் 12, நாடினே டி கிளொ்க் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

Advertisement

Advertisement

ஓவா்கள் முடிவில் ஆனிரி டொ்க்சென் 12, எலிஸ் மரி மாா்க்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் பூஜா வஸ்த்ரகா், தீப்தி சா்மா ஆகியோா் தலா 2, ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்குவது மழையால் தாமதமானது. ஆட்டத்தை தொடர தகுந்த வானிலை இல்லாமல் போனதால், ஆட்டம் அத்துடனேயே கைவிடப்பட்டது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் தற்போது தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments