முகப்பு
செய்திகள்

ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 5:21 AM
அஜீத் சிங் |சுந்தர் சிங் குர்ஜார்| ஷரத் குமார் | மாரியப்பன் தங்கவேலு
பகிர்:

பாரீஸ் பாராலிம்பிக்கில் ஒரே நாளில் 5 பதக்கங்களை கைப்பற்றிய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரீஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒரே நாளில் 3 வெண்கலம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர்.

பதக்கவேட்டை

Advertisement

மகளிருக்கான 400 மீட்டர் (டி20) போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தையும், ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்திய வீரர் அஜீத் சிங் வெள்ளிப் பதக்கமும், மேலும் அதேப் பிரிவில் மற்றொரு இந்திய வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கமும், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் ஷரத் குமார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இருவரும் முறையே வெள்ளி, வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

தீப்தி ஜீவன்ஜி

பிரதமர் வாழ்த்து

இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தனித்தனியே வாழ்த்துப் பதிவுகள் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவுகளில்,

மாரியப்பன் தங்கவேலு

“ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றிருப்பது பாராட்டுதலுக்குரியது.”

தீப்தி ஜீவன்ஜி

“பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள்! அவர் எண்ணற்ற மக்களின் உத்வேகமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.”

அஜீத் சிங்

“ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற அஜீத் சிங்கின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளது.”

சுந்தர் சிங் குர்ஜார்

“ஆண்களுக்கான ஈட்டி எறிதலில்வெண்கலப்பதக்கத்தை வென்று வந்த சுந்தர் சிங் குர்ஜரின் அர்ப்பணிப்பும், உந்துதலும் சிறப்பானது. அவரின் சாதனைக்கு வாழ்த்துக்கள்!”

ஷரத் குமார்

“ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளி வென்றுள்ளார். விளையாட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டும் அவருக்கு பாராட்டுக்கள். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த நாட்டையும் ஊக்குவித்துள்ளார்.”

இவ்வாறு பிரதமர் மோடி அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments