காமன்வெல்த் ஈட்டி எறிதலில் முதல்முறையாக 2 பதக்கங்கள்..! நீரஜ் சோப்ரா வெள்ளி!
காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இந்தியர்கள் குறித்து...
கிளாஸ்கோ காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியர்கள் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்கள். இதில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
காமன்வெல்த் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றார். மற்றுமொரு இந்தியரான யஷ் வீர் சிங் 85.41 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலம் வென்றார்.
Advertisement
Advertisement
இலங்கை வீரர் ருமெஷ் தரங்கா பதிராகே 89.75 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா, யஷ் வீர் சிங் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்கள். காமன்வெல்த் ஈட்டி எறிதலில் முதல்முறையாக இரண்டு இந்தியர்கள் பதக்கம் வென்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
இந்தியாவுக்கு 20ஆவது பதக்கத்தையும் மற்றுமொரு இந்தியர் 21ஆவது பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இதில் 5 தங்கம், 11 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
CWG 2026: Men's Javelin Throw Historic double podium for bharat!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.