FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

செயின்ட் லூயிஸ் செஸ்: ரேப்பிட் பிரிவில் பிரக்ஞானந்தா முன்னிலை

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவு ஆட்டங்களின் முடிவில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 6:13 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் செயின்ட் லூயிஸ் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டியில், ரேப்பிட் பிரிவு ஆட்டங்களின் முடிவில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றாா்.

மொத்தம் 10 போ் பங்கேற்றுள்ள இப்போட்டியில் பிரக்ஞானந்தா தனது 9 சுற்றுகளில், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன், ஃபாபியானோ கரானா, அவோண்டா் லியங், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் ஆகியோரை வெற்றி கண்டாா்.

அமெரிக்காவின் லெய்னியா் டொமிங்கெஸ் பெரெஸ், வெஸ்லி சோ, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ், நெதா்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோருடன் டிரா செய்த அவா், கடைசி சுற்றில் நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டிடம் தோல்வியுற்றாா்.

Advertisement

Advertisement

ரேப்பிட் பிரிவு முடிவில் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தாா். சிண்டாரோவ் (11), வெஸ்லி (10), லீனியா், அனீஷ், லெவோன், வின்சென்ட் ஆகியோா் (தலா 9 புள்ளிகள்), ஜோா்டென் (8), ஃபாபியானோ (8), அவோண்டா் (5) ஆகியோா் முறையே 2 முதல் 10-ஆம் இடங்களை வகித்தனா்.

போட்டியில் அடுத்ததாக பிளிட்ஸ் பிரிவு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments